இணையதள சேவை துண்டிப்பு: என்ன மாதிரியான மனித உரிமை மீறல் இது? விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகை மியா கலீபா டூவீட்


இணையதள சேவை துண்டிப்பு: என்ன மாதிரியான மனித உரிமை மீறல் இது? விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகை மியா கலீபா டூவீட்
x
தினத்தந்தி 3 Feb 2021 9:05 AM GMT (Updated: 3 Feb 2021 9:05 AM GMT)

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகை மியா கலீபா டுவீட் செய்துள்ளார்.

புதுடெல்லி,

3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவில்லை.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே விவசாயிகள் மீண்டும் 6-ந் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சிங்கு எல்லையில் சிமெண்டு தடுப்புகள், இரும்பு கம்பிகளால் பிணைக்கப்பட்டுள்ளன. டெல்லி-அரியானா எல்லையில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் தற்காலிக சுவர் எழுப்பப்படுகிறது. காசிப்பூர் எல்லையில் பல அடுக்கு தடுப்புகளுடன் முள்வேலிகளும் போடப்பட்டுள்ளன. இதுதவிர சாலைகளில் பெரிய ஆணிகளையும் போலீசார் பதித்துள்ளனர். இதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பாடகி ரிஹான்னா, சூழலியலர் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக டுவீட் செய்து இருந்தனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச பிரபலங்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் நடிகை மியா கலீபாவும் ஆதரவாக விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

புதுடெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது?” “என்ன மாதிரியான மனித உரிமை மீறல் இது? நான் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கின்றேன் என மியா கலீபா டுவீட் செய்துள்ளார். 

மேலும் 'சம்பளத்திற்கு நடிப்பவர்களா? இவர்கள் இந்த அவார்ட் சீசனில் கவனிக்கப்படமாட்டார்கள். நான் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.


Next Story