சினிமா செய்திகள்

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் ஷாலினி? + "||" + Shalini to star again after 20 years?

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் ஷாலினி?

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் ஷாலினி?
ஷாலினியை 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை ஷாலினி மலையாளத்தில் அனியாத பிறவு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை தமிழில் விஜய் நடிப்பில் காதலுக்கு மரியாதை என்ற பெயரில் ரீமேக் செய்தபோது ஷாலினியே கதாநாயகியாக நடித்தார். 

இதுதான் ஷாலினி தமிழில் அறிமுகமான முதல் படம். இந்த படம் வெற்றி பெற்றதால் வாய்ப்புகள் குவிந்தன. அஜித்குமார் ஜோடியாக அமர்க்களம் படத்தில் நடித்தார். மணிரத்னம் இயக்கத்தில் நடித்த அலைபாயுதே இன்னொரு திருப்பு முனை படமாக அமைந்தது. கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். 

பின்னர் அஜித்குமாரும் ஷாலினியும் காதலித்து 2000-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய ஷாலினியை 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.