சினிமா செய்திகள்

நடிகர் தனுஷின் கர்ணன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு + "||" + First look poster release of actor Dhanush Karnan movie

நடிகர் தனுஷின் கர்ணன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

நடிகர் தனுஷின் கர்ணன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு
நடிகர் தனுஷின் கர்ணன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் காதலர் தினத்தன்று (இன்று) வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்து உள்ளார். கதாநாயகி, ரெஜினா விஜயன். ராஜிஷா, லால், யோகிபாபு, லட்சுமி பிரியா, கவுரி கிஷன் ஆகியோரும் நடிக்கின்றனர்.  கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக் குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பதிவில் சமீபத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் தனுஷின் கர்ணன் படத்தின் முதல் பார்வை காதலர் தினத்தன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் 'கர்ணன்' வெளியாகும் என்றும் படக்குழு இந்த முதல் பார்வை போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.