சினிமா செய்திகள்

அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியீடு + "||" + The first look of 'Valaimai' starring Ajith will be released soon

அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியீடு

அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியீடு
அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியிடப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
சென்னை,

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். 

இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. வலிமை படம் நேரடியாகத் திரையரங்குகளில் தான் வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார்.

வலிமை அப்டேட் குறித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில் யுவன் சங்கர் ராஜா, வலிமை படத்தின் பாடல்கள் பற்றி சமீபத்தில் தகவல் தெரிவித்தார். தன்னுடைய சமூக வலைதளத்தில் யுவன் கூறியதாவது: வலிமை படத்தில் இடம்பெறும் அஜித்தின் தொடக்கப் பாடலை முடித்துள்ளோம். குத்துப் பாடல் பாணியில் அமைந்துள்ள அப்பாடல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். 

ஒடிஷாவிலிருந்து திருவிழா டிரம்ஸ் கலைஞர்களை அழைத்து வந்து பாடலைப் பதிவு செய்துள்ளோம். இது ஒரு சரியான ஜனரஞ்சகப் பாடலாக இருக்கும். இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடலை எழுதியுள்ளார் என்றார்.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், டுவிட்டரில் கூறியதாவது:-

வணக்கம். வலிமை படத்துக்காக நீங்கள் காண்பித்து வரும் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. வலிமை முதல் பார்வை போஸ்டரை விரைவில் வெளியிடவுள்ளதால் சற்று பொறுமையாக இருக்கவும் என பதிவிட்டுள்ளார்.