சினிமா செய்திகள்

சூர்யா படத்தில் மீண்டும் வடிவேல்? + "||" + Surya in the film Vadivelu again

சூர்யா படத்தில் மீண்டும் வடிவேல்?

சூர்யா படத்தில் மீண்டும் வடிவேல்?
இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்து விலகியதால் அவர் புதிய படங்களில் நடிக்க பட அதிபர்கள் சங்கம் தடை விதித்தது. இதனால் பல வருடங்களாக அவர் நடிக்கவில்லை.
நகைச்சுவை நடிகர் வடிவேல் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்து விலகியதால் அவர் புதிய படங்களில் நடிக்க பட அதிபர்கள் சங்கம் தடை விதித்தது. இதனால் பல வருடங்களாக அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் நடிக்க தயாராகி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு வடிவேல் தெரிவித்து இருந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடிவேல் ஏற்கனவே சூர்யாவுடன் வேல், பிரண்ட்ஸ், ஆறு, ஆதவன், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இவர்கள் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் நடித்துள்ளார். சூர்யா கொரோனாவில் சிக்கி குணமாகி தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதால் அவர் இல்லாமல் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். விரைவில் படப்பிடிப்பில் அவர் பங்கேற்கிறார்.