சினிமா செய்திகள்

தனுஷ் எதிர்ப்பை மீறி ஓ.டி.டி.யில் வெளியாகும் ஜகமே தந்திரம் படம் + "||" + Jagame Tantra movie to be released on OTD despite Dhanush's opposition

தனுஷ் எதிர்ப்பை மீறி ஓ.டி.டி.யில் வெளியாகும் ஜகமே தந்திரம் படம்

தனுஷ் எதிர்ப்பை மீறி ஓ.டி.டி.யில் வெளியாகும் ஜகமே தந்திரம் படம்
தனுஷ் எதிர்ப்பை மீறி ஓ.டி.டி. தளத்திலேயே வெளியிட தயாரிப்பு தரப்பில் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தை ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடந்தன. இதனை தனுஷ் எதிர்த்தார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப்போல நானும் ஜகமே தந்திரம் திரையரங்கில் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

தனுஷ் ரசிகர்களும் ஓ.டி.டி.யில் படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஓட்டினர். இதனால் ஜகமே தந்திரம் படத்தை தியேட்டர்களில் வெளியிட பட நிறுவனம் முடிவு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் இதே பட நிறுவனம் தயாரித்த ஏலே படம் ஓ.டி.டி.யில் வெளியாவதால் அந்த படத்தை தியேட்டர் அதிபர்கள் திரையிட மறுத்து விட்டனர். இந்த மோதல் போக்கினால் ஜகமே தந்திரம் படத்தையும் ஓ.டி.டி. தளத்திலேயே வெளியிட தயாரிப்பு தரப்பில் முடிவு செய்துள்ளதாகவும், வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.