சினிமா செய்திகள்

‘டான்’ படம் தொடங்கியது: சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா + "||" + ‘Dawn’ movie started: SJ.Surya as the villain for Sivakarthikeyan

‘டான்’ படம் தொடங்கியது: சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா

‘டான்’ படம் தொடங்கியது: சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘டான்’ புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடித்து இதற்கு முன்பு திரைக்கு வந்த படம், ‘ஹீரோ’. அதில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து இருந்தார். மித்ரன் இயக்கி இருந்தார். இதையடுத்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ‘டான்’, வளர இருக்கிறது.

இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியா அருள் சங்கர் நடிக்கிறார். இவர், கேரள அழகி. வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருக்கிறார். இன்னொரு நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மற்றும் சூரி, சமுத்திரக்கனி, பாலசரவணன் ஆகிய மூன்று பேரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை சிபிசக்ரவர்த்தி டைரக்டு செய்கிறார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.