சினிமா செய்திகள்

மீண்டும் நடிக்கும் தீபன் + "||" + Theepan to play again

மீண்டும் நடிக்கும் தீபன்

மீண்டும் நடிக்கும் தீபன்
பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் சிவாஜி கணேசனுடன் நடித்து பிரபலமானவர் தீபன். அந்த படத்தில் தீபன் நடித்த ‘அந்த நிலாவதான் கையில பிடிச்சேன் என் ராஜாவுக்காக’... பாடல் பட்ட தொட்டியெங்கும் ஒலித்தது.
பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் சிவாஜி கணேசனுடன் நடித்து பிரபலமானவர் தீபன். அந்த படத்தில் தீபன் நடித்த ‘அந்த நிலாவதான் கையில பிடிச்சேன் என் ராஜாவுக்காக’... பாடல் பட்ட தொட்டியெங்கும் ஒலித்தது. தொடர்ந்து மிஸ்டர் பாரத், ஊர்க்குருவி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். இவர் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் உறவினர். மீண்டும் நடிப்பது குறித்து தீபன் கூறும்போது, ‘எனக்கு முதல் மரியாதை படம் மூலம் நல்ல அறிமுகம் கிடைத்தது. எம்.ஜி.ஆர் உறவினர் என்பதால் இயக்குனர்கள் என்னை அணுக தயங்கினர். இதனால் படங்கள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது ‘கேர் ஆப் காதல்’ படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்ததால் நடிக்க வந்தேன். இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பேன் என்றார். தீபனுக்கு மேலும் சில புதிய படங்களில் நடிக்க தற்போது வாய்ப்புகள் வந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும்
சரவணன் சுப்பையா இயக்கத்தில் ‘மீண்டும்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.
2. நியூசிலாந்தில் மீண்டும் ஊரடங்கு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோதிலும் சிறிய தீவு நாடான நியூசிலாந்து வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்து கொரோனா இல்லாத நாடாக உருவெடுத்தது.
3. மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் ரஜினி? - அண்ணாத்த படத்திற்கு பின் இணைவதாக தகவல்
நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. மீண்டும் ஒரு பேய் படம்
டைரக்டர் பாஸ்கர், அடுத்ததாகவும் ஒரு பேய் படத்தை இயக்குகிறார்.
5. மீண்டும் தனுஷ் ஜோடியாக தமன்னா
தனுஷ் ஏற்கனவே ஜகமே தந்திரம், கர்ணன் மற்றும் இந்தியில் அந்த்ரங்கி ரே ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.