சினிமா செய்திகள்

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம் + "||" + To Nayantara Married soon

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் காதல் வயப்பட்டு தொடர்ந்து உறவை வளர்த்து வருகிறார்கள்.
 இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டது என்றும், திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் தொடர்ந்து கிசுகிசுக்கள் பரவி வந்தன. இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பதை விக்னேஷ் சிவன் சூசகமாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்த மாத இறுதியில் திருமணம் நடக்க உள்ளதாகவும், திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வருவதாகவும் புதிய தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் விளக்கம் கொடுக்கப்படவில்லை.

 நயன்தாரா ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலித்து தோல்வியில் முடிந்தது குறிப்படத்தக்கது. தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். காதலருடன் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் சில படங்களை தயாரிக்கவும் செய்கிறார்.