சினிமா செய்திகள்

கொரோனாவில் இருந்து மீள ரகுல்பிரீத் சிங்குக்கு உதவிய யோகா + "||" + To Ragulpreet Singh Helped yoga

கொரோனாவில் இருந்து மீள ரகுல்பிரீத் சிங்குக்கு உதவிய யோகா

கொரோனாவில் இருந்து மீள ரகுல்பிரீத் சிங்குக்கு உதவிய யோகா
கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமான ரகுல்பிரீத் சிங் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு.
“சினிமாவில் என்னுடன்தான் எனக்கு போட்டி. இதற்கு முன்பு நடித்த படத்துக்கும், இப்போது நடிக்கும் படத்துக்கும் நடிப்பு ரீதியாக ஒருபடி மேல் ஏறி இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் என் மனதில் எப்போதும் இருக்கும். ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு அரங்குக்கு செல்ல பயந்தேன். படப்பிடிப்பில் எனக்கும் கொரோனா வந்தது. நான் பொதுவாக உணவிலும், ஆரோக்கியத்திலும் கவனமாக இருப்பதால் அதிகமாக மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் தனிமைப்படுத்தலில் இருந்தேன். யோகா பிராணயாம மூச்சு பயிற்சிகள் செய்தேன். இதனால் 12 நாட்களில் குணமாகி விட்டேன். கொரோனாவில் இருந்து குணமான பிறகு உடற்பயிற்சி செய்யும்போது உடல் வலி இருந்தது. கொரோனாவில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமக்கு வராது என்று நினைக்காதீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களை நினைத்து கவனமாக இருங்கள்.’' இவ்வாறு அவர் கூறினார்.