சினிமா செய்திகள்

போட்டி சங்கம் தொடங்கிய பாரதிராஜா அணிக்கு நோட்டீஸ் + "||" + Notice to Bharatiraja team which started the competition association

போட்டி சங்கம் தொடங்கிய பாரதிராஜா அணிக்கு நோட்டீஸ்

போட்டி சங்கம் தொடங்கிய பாரதிராஜா அணிக்கு நோட்டீஸ்
பாரதிராஜா தலைமையில் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் போட்டியாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது.
பாரதிராஜா தலைமையில் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் போட்டியாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு தலைவராக தேனாண்டாள் முரளி வெற்றி பெற்றார். பாரதிராஜா சங்கத்தில் இருப்பவர்கள் மீண்டும் தாய் சங்கத்தில் இணையும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அது ஏற்கப்படவில்லை. இதையடுத்து பாரதிராஜா சங்கத்தினருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் மன்னன் கூறும்போது, “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது தாய் சங்கம். கொரோனா பரவல் நேரத்தில் பாரதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கினார். தற்போது தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட தாய் சங்க நிர்வாகம் செயல்படுகிறது. இதில் உறுப்பினராக இருந்து கொண்டு போட்டியாக சங்கம் நடத்துவது முறையல்ல. எனவே பாரதிராஜா தவிர்த்து நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். விளக்கம் பெற்ற பிறகு சங்க விதியின்படி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சரின் தாயார் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராசா இன்று மாலைக்குள் தலைமை தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் அளிக்க வேண்டும்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்த அவதூறு பேச்சு பற்றி ஆ.ராசா தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
2. சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு
சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் கொடுத்த விவகாரம் தொடர்பாக, கிருஷ்ணகிரி டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
3. சுகாதார கேடு ஏற்படும் விதமாக செயல்பட்ட டீக்கடை உரிமையாளருக்கு நோட்டீஸ்
சுகாதார கேடு ஏற்படும் விதமாக செயல்பட்ட டீக்கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
4. அவதூறு பரப்பிய யூ-டியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் அக்சய்குமார் நோட்டீஸ்
ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு பீகாரை சேர்ந்த யூ-டியூப் சேனலுக்கு நடிகர் அக்சய் குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
5. விசாரணைக்கு ஆஜராகுமாறு 2-வது முறையாக நடிகை கங்கனா ரணாவத்துக்கு நோட்டீஸ் - மும்பை போலீஸ் அனுப்பியது
விசாரணைக்கு ஆஜராகுமாறு 2-வது முறையாக நடிகை கங்கனா ரணாவத்திற்கு மும்பை போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.