சினிமா செய்திகள்

சர்ச்சை கதாபாத்திரம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன் + "||" + The controversial character is an apologetic rich man

சர்ச்சை கதாபாத்திரம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன்

சர்ச்சை கதாபாத்திரம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன்
காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களை கொடுத்த செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற திகில் படம் திரைக்கு வந்துள்ளது.
காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களை கொடுத்த செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற திகில் படம் திரைக்கு வந்துள்ளது. இதில் எதிர்மறையான எஸ்.ஜே சூர்யா கதாபாத்திரத்துக்கு ராமசாமி என்ற பெயர் வைத்துள்ளதாக சர்ச்சை கிளம்பியது. இந்த படம் சம்பந்தமான பேட்டியொன்றிலும் பெரியாரை அவமதிப்பதுபோல் செல்வராகவன் பதில் அளித்ததாக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் உருவானது. செல்வராகவனை கடுமையாக கண்டித்து பலரும் பதிவுகள் வெளியிட்டார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து செல்வராகவன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ''நண்பர்களே அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிகாட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்'' என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. நடிகரான செல்வராகவன்
7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
2. வைரலாகும் புகைப்படம் கீர்த்தி சுரேசுடன் நடிக்கும் இயக்குனர் செல்வராகவன்
சாணிக் காயிதம் என்ற படத்தில் கதையின் நாயகனாக செல்வராகவன் நடிக்கிறார். இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.