சினிமா செய்திகள்

பிரியா வாரியருக்கு வரும் காதல் கடிதங்கள் + "||" + Love letters to Priya Warrior

பிரியா வாரியருக்கு வரும் காதல் கடிதங்கள்

பிரியா வாரியருக்கு வரும் காதல் கடிதங்கள்
பிரியா வாரியருக்கு வரும் காதல் கடிதங்கள்.
மலையாளத்தில் வெளியான ‘ஒரு அடார் லவ்’ படத்தில் கண் சிமிட்டி பிரபலமான பிரியா வாரியர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

''ஒரு அடார் லவ் படத்தின் மூலம் இவ்வளவு பெயர் கிடைக்கும் என்று கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. நிறைய பிரபலங்கள் என்னை மாதிரி கண் அடிக்க முயன்று முடியவில்லை என்றனர். நான் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரியில்தான் படித்தேன். கல்லூரியில் கலாட்டா செய்வேன். லூட்டி அடிப்பேன். கல்லூரியில் படிக்கும்போது எனக்கும் காதல் கடிதம் வந்தது. இப்போது ரசிகர்கள் நிறையபேர் காதல் கடிதம் அனுப்புகிறார்கள். காதல் கடிதங்களை அழகாக எழுதி அனுப்புகின்றனர். அவை என்னை ஈர்ப்பதாக உள்ளன. அதில் சிலவற்றை பார்க்கும்போது சிரிப்பு வரும். சில கடிதங்களில் என்னை வர்ணித்து இருப்பதை பார்த்து பிரமிப்பேன். அழகான காதல் கடிதங்களை மறுபடிமறுபடி படித்து பார்ப்பேன்.’'

இவ்வாறு பிரியா வாரியர் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. கொங்கணாபுரம் அருகே கேட்பாரற்று நின்ற கார்: மிளகாய் பொடி தூவி காதல் ஜோடி கடத்தலா?
கொங்கணாபுரம் அருகே கேட்பாரற்று நின்றிருந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்ததால், காதல் ஜோடி கடத்தப்பட்டனரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. புதுக்கோட்டையில் காதலியை பார்க்க சென்ற வாலிபர் அடித்துக்கொலை
புதுக்கோட்டையில் காதலியை பார்க்க சென்ற வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காதலியின் அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
3. காதல் ஜோடிகளால் களைகட்டிய மாமல்லபுரம்
காதல் ஜோடிகளால் மாமல்லபுரம் நகரம் களை கட்டியது.