சினிமா செய்திகள்

ஜீ.வி.பிரகாஷ் படத்தில் சர்ச்சை: திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்வது எப்படி? + "||" + Controversy in GV.Prakash film: How to live as husband and wife without getting married?

ஜீ.வி.பிரகாஷ் படத்தில் சர்ச்சை: திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்வது எப்படி?

ஜீ.வி.பிரகாஷ் படத்தில் சர்ச்சை: திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்வது எப்படி?
ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் ‘பேச்சுலர்’படத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்வது எப்படி? என சர்ச்சைக்குரிய ஒரு கருத்து எழுப்பப்பட்டுள்ளது.
ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘பேச்சுலர்’ படத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்து எழுப்பப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்வது எப்படி? என்ற பரபரப்பான பிரச்சினையை கருவாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தில் ஜீ.வி.பிரகாசுடன் திவ்ய பாரதி, முனிஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். சதிஸ் செல்வகுமார் டைரக்டு செய்து இருக்கிறார். டில்லிபாபு தயாரித்துள்ளார். படத்தை பற்றி டைரக்டர் சதிஸ் கூறியதாவது:-

“இது, ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். பொள்ளாச்சியில் இருந்து வேலைக்காக பெங்களூருக்கு போகும் இளைஞரை பற்றிய கதை. அவர் அங்கே ஒரு பெண்ணை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே ஒரு புரிதல் ஏற்படுகிறது. உறவு வைத்துக் கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.

இது சினிமா போல் இருக்காது. காட்சிகள் அனைத்தும் யதார்த்தமாக இருக்கும். சென்னை, பொள்ளாச்சி, பெங்களூரு ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. படத்தை தியேட்டர்களில் திரையிட முயற்சித்து வருகிறோம்”.