சினிமா செய்திகள்

ரம்ஜான் பண்டிகையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ரிலீஸ் + "||" + Sivakarthikeyan's Doctor film released during Ramadan

ரம்ஜான் பண்டிகையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ரிலீஸ்

ரம்ஜான் பண்டிகையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ரிலீஸ்
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் கொரோனாவால் ஏற்கனவே திரைக்கு வருவதில் தாமதம் ஆனது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் கொரோனாவால் ஏற்கனவே திரைக்கு வருவதில் தாமதம் ஆனது. பின்னர் வருகிற 26-ந் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர். ஆனால் சட்டமன்ற தேர்தல் தடை போட்டது. தேர்தல் காரணமாக தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரத்து குறையும் சூழ்நிலை உருவானதால் படத்தின் ரிலீசை தள்ளிவைப்பதாக படக்குழு அறிவித்தது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மீண்டும் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. இந்த நிலையில் டாக்டர் படம் ரம்ஜான் பண்டிகையில் வெளியாகும் என்று பட நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், “புதிய வெளியீட்டு தேதியை முடிவு செய்துள்ளோம். டாக்டர் வருண் மற்றும் குழுவினரை திரையரங்குகளில் ரம்ஜான் பண்டிகையில் இருந்து சந்திக்கலாம். இந்த சமயத்தில் டாக்டர் படம் மேலும் மெருகேற்றப்படும். அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள். ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது’'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.