சினிமா செய்திகள்

நடிகர் மகளுடன் நெருக்கம் காதலில் விஜய்தேவரகொண்டா? + "||" + Did Vijay Thevara fall in love with the actor's daughter?

நடிகர் மகளுடன் நெருக்கம் காதலில் விஜய்தேவரகொண்டா?

நடிகர் மகளுடன் நெருக்கம் காதலில் விஜய்தேவரகொண்டா?
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமான விஜய்தேவரகொண்டாவுக்கு அதிக ரசிகைகள் உள்ளனர்.
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமான விஜய்தேவரகொண்டாவுக்கு அதிக ரசிகைகள் உள்ளனர். அர்ஜுன் ரெட்டி படம் தமிழிலும் விக்ரம் மகன் துருவ் நடிக்க ரீமேக் ஆனது. தமிழில் நோட்டா படத்திலும் விஜய்தேவரகொண்டா நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடித்த டியர் காமரேட் படம் தமிழிலும் வெளியானது. நடிகைகள் தமன்னா, ஜான்வி கபூர், கியாரா அத்வானி உள்ளிட்ட நடிகைகள் விஜய்தேவரகொண்டா நடிப்பை பாராட்டியதுடன் அவருடன் இணைந்து நடிக்கவும் விருப்பம் தெரிவித்தனர். இந்தி நடிகர் சயீப் அலிகான் மகளும், நடிகையுமான சாரா அலிகானும் தன்னை விஜய்தேவரகொண்டாவின் ரசிகை என்று கூறிக்கொண்டார். அவருடன் நெருக்கமாக எடுத்த செல்பி படத்தையும் பகிர்ந்தார். இந்த நிலையில் விஜய்தேவரகொண்டாவுக்கும், சாரா அலிகானுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இந்தி பட உலகில் தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே சாரா அலிகான் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் ஆகியோரை காதலித்து பின்னர் காதலை முறித்துக்கொண்டதாக கூறப்பட்டது.