‘மட்டி’ படத்தில் நிறைய சவால்கள் “14 கேமராக்களுடன் படப்பிடிப்பை நடத்தினோம்” - டைரக்டர் பேட்டி


‘மட்டி’ படத்தில் நிறைய சவால்கள் “14 கேமராக்களுடன் படப்பிடிப்பை நடத்தினோம்” - டைரக்டர் பேட்டி
x
தினத்தந்தி 13 March 2021 3:57 PM IST (Updated: 13 March 2021 3:57 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம், ‘மட்டி’. இந்த படத்தை புதுமுக டைரக்டர் பிரகபல் இயக்கியிருக்கிறார். பிரேமா கிருஷ்ணதாஸ் தயாரித்துள்ளார். படத்தை பற்றி டைரக்டர் பிரகபல் கூறியதாவது:-

“மட்டி படத்தில் யுவன், ரிதான் கிருஷ்ணா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் தொழில்நுட்ப வேலைகள் அதிகமாக இருந்தன. 14 கேமராக்களை பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்தினோம். படம் நன்றாக வந்திருக்கிறது. அதற்கு பின்னால் நிறைய சவால்கள் இருந்தன.

எல்லோரும் மிக கடினமாக உழைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். டிரைலரில் பார்த்த பிரமிப்பு படத்திலும் இருக்கிறது. படம் 5 மொழிகளில் தயாராகி இருக்கிறது. எல்லோருக்கும் படம் பிடிக்கும் என்று நம்பு கிறேன்”.
1 More update

Next Story