சினிமா செய்திகள்

டுவிட்டரில் இருந்து விலகிய அமீர்கான் + "||" + Aamir Khan left Twitter

டுவிட்டரில் இருந்து விலகிய அமீர்கான்

டுவிட்டரில் இருந்து விலகிய அமீர்கான்
அமீர்கான் டுவிட்டரில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நடிகர், நடிகைகள் சமூக வலைத்தள பக்கங்களில் கணக்கு வைத்து தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். நடிக்கும் புதிய படங்கள் பற்றிய தகவல், அரசியல் சமூக கருத்துக்கள் போன்றவற்றையும் பகிர்கின்றனர். பிரபல இந்தி நடிகர் அமீர்கானும் சமூக வலைத்தள பக்கத்தில் இணைந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தார். இந்த நிலையில் அமீர்கான் டுவிட்டரில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘எனது பிறந்த நாளுக்கு அனைவரும் வாழ்த்தியது மகிழ்ச்சியாக இருந்தது. சமூக வலைத்தளத்தில் இதுதான் எனது கடைசி பதிவு. நான் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகி இருக்க முடிவு செய்து இருக்கிறேன். ஏற்கனவே இருந்ததுபோல் தொடர்பில் இருப்போம்'' என்று கூறியுள்ளார். இது அமீர்கான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமீர்கான் தற்போது லால்சிங் சட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக கரீனா கபூர் வரு கிறார்.