டிக்கெட் கட்டணம் அதிகமாக இருந்தால் ஒரு ஏழை குடும்பத்துடன் எப்படி படம் பார்க்க முடியும்? டி.ராஜேந்தர் ஆவேச பேச்சு


டிக்கெட் கட்டணம் அதிகமாக இருந்தால் ஒரு ஏழை குடும்பத்துடன் எப்படி படம் பார்க்க முடியும்? டி.ராஜேந்தர் ஆவேச பேச்சு
x
தினத்தந்தி 28 March 2021 2:30 PM GMT (Updated: 28 March 2021 2:30 PM GMT)

‘தண்ணி வண்டி’ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.

நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி கதாநாயகனாக நடித்துள்ள ‘தண்ணி வண்டி’ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில் கலந்துகொண்டு டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தர் பேசியதாவது:-

‘‘சினிமா தியேட்டர்களில் கட்டணம் அதிகமாக இருக்கிறது. கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பல காலமாக சொல்லி வருகிறேன். டிக்கெட் கட்டணம் ரூ.100, ரூ.150 என்று இருந்தால் ஒரு ஏழை எப்படி குடும்பத்துடன் படம் பார்க்க முடியும்?

டிக்கெட் கட்டணத்தைப்போல் கேண்டீனில் உணவுப்பொருட்களின் விலையும் அதிகமாக இருக்கிறது. பாப்கார்ன் விலை ரூ.150. ஆந்திராவில் படம் ஓடுகிறது என்றால் அங்கே டிக்கெட் கட்டணம் ரூ.50, ரூ.70 தான். இங்கே டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பேச யாருக்கும் துணிவில்லை. மனம் இல்லை. டிக்கெட் கட்டணத்தை குறைத்தால், சின்ன படங்கள் வாழும்.

படம் பார்க்க 50 சதவீதம் பேர்தான் வரவேண்டும், ஆனால் ஜி.எஸ்.டி. மட்டும் முழுமையாக கொடுக்க வேண்டும் என்றால் என்ன நியாயம்?’’ இவ்வாறு டி.ராஜேந்தர் ஆவேசமாக பேசினார்.

Next Story