எனது சொந்த வீடு பிரச்சினையில் உள்ளதா? டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார் விளக்கம்


எனது சொந்த வீடு பிரச்சினையில் உள்ளதா? டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார் விளக்கம்
x
தினத்தந்தி 29 March 2021 11:50 AM GMT (Updated: 29 March 2021 11:50 AM GMT)

சொந்தமாக வீடு கட்டி அதில் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எனக்கும் ஒரு கனவு. அதற்காக நான் ஒரு வீடும் கட்டினேன்.

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் வீடியோவில், ''நான் ஒரு சராசரி இந்தியன். எல்லோருக்கும் இருக்கிற மாதிரி சொந்தமாக வீடு கட்டி அதில் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எனக்கும் ஒரு கனவு. அதற்காக நான் ஒரு வீடும் கட்டினேன். அந்த வீட்டை கட்சிகாரர்கள் வந்து ஆக்கிரமித்ததால் எந்தவிதத்தில் நியாயம். அதை பார்த்து சும்மா இருக்க நான் கோழை இல்லை. தட்டிகேட்டபோது பிரச்சினை. என் வீடு என் உயிர். என் சுவர் எனது உரிமை'' என்று பேசி இருந்தார். இது பரபரப்பானது. கே.எஸ்.ரவிக்குமார் வீட்டை மீட்க பலரும் அவருக்கு ஆதரவாக பேசினார்கள் தற்போது இதற்கு விளக்கம் அளித்து கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோவில், ''நான் வெளியிட்ட வீடியோவுக்காக இரண்டு நாட்களாக என்னை தெரிந்தவர்களும் தெரியாதவர்களூம் நேரிலும் போனிலும் பேசி ஆதரவு கொடுத்தனர். அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. அந்த வீடியோல் நான் நடிக்கிற மதில் படத்தின் கதாபாத்திரமாக பேசினேன். அதை ஏன் முதலில் சொல்லவில்லை என்று கேட்கலாம். சொந்த வீடு வைத்துள்ள நிறைய பேருக்கு பிரச்சினை உள்ளது. அதை படத்தில் சொல்லி இருக்கிறோம்’' என்றார். படத்தை விளம்பரப்படுத்த இப்படி பேசலாமா என்று கே.எஸ்.ரவிக்குமாரை வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகிறார்கள்.

Next Story