சினிமா செய்திகள்

மதுபான விடுதியில் நடிகர் அஜய் தேவ்கன் தாக்கப்பட்டாரா? + "||" + Was actor Ajay Devgan attacked at a bar?

மதுபான விடுதியில் நடிகர் அஜய் தேவ்கன் தாக்கப்பட்டாரா?

மதுபான விடுதியில் நடிகர் அஜய் தேவ்கன் தாக்கப்பட்டாரா?
மதுபான விடுதியில் நடிகர் அஜய் தேவ்கன் தாக்கப்பட்டாரா? என இந்தி பட உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரபல இந்தி நடிகர் அஜய்தேவ்கன். இவர் டெல்லியில் உள்ள மதுபான விடுதி வாசலில் நின்று ஒருவருடன் சண்டை போட்டதாக வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் இருந்த இருவரும் மோசமான வார்த்தைகளை பேசி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். வீடியோவில் சண்டை போட்டவர்களில் வெள்ளை சட்டை அணிந்திருப்பவர் அஜய்தேவ்கன் என்று பேசப்பட்டது. இந்த வீடியோ முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரலானது. இது இந்தி பட உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அஜய்தேவ்கன் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், “டெல்லியில் உள்ள மதுபான விடுதியில் அஜய்தேவ்கன் சண்டை போட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த தன்ஹாஜி படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு பிறகு அவர் டெல்லி செல்லவில்லை. மைதான், மே டே உள்ளிட்ட பட வேலைகளுக்காக அஜய்தேவ்கன் மும்பையிலேயே இருக்கிறார். வதந்திகளை பரப்ப வேண்டாம்'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.