சினிமா செய்திகள்

மோகன்லால் இயக்கும் படத்தில் அஜித்குமார்? + "||" + Ajith Kumar in the film directed by Mohanlal?

மோகன்லால் இயக்கும் படத்தில் அஜித்குமார்?

மோகன்லால் இயக்கும் படத்தில் அஜித்குமார்?
அஜித்குமார் வலிமை படத்தில் நடிக்கிறார். நாயகியாக கியூமா குரோஷி வருகிறார். வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.
அஜித்குமார் வலிமை படத்தில் நடிக்கிறார். நாயகியாக கியூமா குரோஷி வருகிறார். வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஒரு சண்டை காட்சி மட்டும் பாக்கி உள்ளது. இதை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு புறம் வலிமை படத்துக்கான தொழில்நுட்ப பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மே 1-ந் தேதி வெளியாக இருக்கிறது. வலிமை படத்தின் தமிழக தியேட்டர் உரிமை பெரிய தொகைக்கு விற்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அடுத்து மோகன்லால் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளதாக புதிய தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. மோகன்லால் பரோஸ் என்ற மலையாள படத்தை இயக்கி வருகிறார். 3டி தொழில் நுட்பத்தில் குழந்தைகளுக்கான படமாக தயாராகிறது.

பிருதிவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. பரோஸ் படத்தில் அஜித்குமாரையும் நடிக்க வைக்க மோகன்லால் விரும்பியதாகவும் இதற்காக அஜித்தை அணுகி பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வைரமுத்து பாடலை இயக்கும் விக்ரம் சுகுமாரன்
கவிஞர் வைரமுத்து பிரம்மாண்டமாக உருவாக்க இருக்கும் நாட்படு தேறல் என்ற தொடரில் விக்ரம் சுகுமாரன் இணைந்து இருக்கிறார்.