சினிமா செய்திகள்

இந்தியன்-2 படத்தை முடிக்காமல் வேறு திரைப்படத்தை இயக்க ஷங்கருக்கு தடை இல்லை + "||" + Shankar is not barred from directing another film without completing Indian-2

இந்தியன்-2 படத்தை முடிக்காமல் வேறு திரைப்படத்தை இயக்க ஷங்கருக்கு தடை இல்லை

இந்தியன்-2 படத்தை முடிக்காமல் வேறு திரைப்படத்தை இயக்க ஷங்கருக்கு தடை இல்லை
இந்தியன்-2 படத்தை முடிக்காமல் வேறு திரைப்படத்தை இயக்க ஷங்கருக்கு தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2, திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் லைகா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கில், ‘‘இந்தியன்-2 படத்தை ரூ.150 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டோம். ஆனால், ரூ.236 கோடி செலவு செய்தும், 80 சதவீத படப்பிடிப்புத்தான் முடிந்துள்ளது.

இயக்குனர் ஷங்கருக்கு ரூ.40 கோடி சம்பளம் பேசி, இதுவரை ரூ.14 கோடி கொடுத்து விட்டோம்.

மீதமுள்ள ரூ.26 கோடியை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் தயாராக உள்ளோம்.

இந்தியன்-2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும். இந்தியன்-2 படத்தின் மீதம் உள்ள பகுதிகளை விரைவாக முடித்து தர ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் ஷங்கரின் விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. பிற படங்களை இயக்கக்கூடாது என ஷங்கருக்கு தடை விதிக்கவும் முடியாது என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கு குறித்து இயக்குனர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.