சினிமா செய்திகள்

தனி விமானத்தில் வந்த தமன்னா + "||" + On a separate plane Tamanna who came

தனி விமானத்தில் வந்த தமன்னா

தனி விமானத்தில் வந்த தமன்னா
நயன்தாரா கடந்த வருடம் கொரோனா ஊரடங்கில் கோவாவுக்கும், கேரளாவுக்கும் தனி விமானத்தில் சென்றது பரபரப்பானது.
இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சிக்கு தனி விமானத்தில் சென்றார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் தற்போது நடிகை தமன்னாவும் தனி விமானத்தில் பறந்துள்ளார். மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு தனி விமானத்தில் அவர் வந்துள்ளார். தன்னுடன் சிகை அலங்கார நிபுணர், ஒப்பனை கலைஞர் ஆகியோரையும் அதே விமானத்தில் அழைத்து வந்துள்ளார். தமன்னா தனி விமானத்தில் பயணித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவை வைரலாகிறது. தமன்னா தற்போது 4 தெலுங்கு படங்களிலும் ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார். முதல் தடவையாக ‘11 த் ஹவர்' என்ற தெலுங்கு வெப் தொடரில் அறிமுகமானார். இந்த தொடர் கடந்த வாரம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. ஆனாலும் அந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது. நவம்பர் ஸ்டோரி என்ற இன்னொரு வெப் தொடரிலும் நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தனி விமானத்தில் தேன்நிலவா?
சென்னைக்கும், டெல்லிக்கும் இடையே தனி விமானத்தில் அடிக்கடி பறப்பார்கள். அதை மாற்றிக்காட்டி இருக்கிறார், நடிகை நயன்தாரா.