சினிமா செய்திகள்

முக கவசம் அணியாமல் வாழ ஏங்குகிறேன்-நடிகை பூஜா ஹெக்டே + "||" + Without wearing a face shield I long to live -Actress Pooja Hegde

முக கவசம் அணியாமல் வாழ ஏங்குகிறேன்-நடிகை பூஜா ஹெக்டே

முக கவசம் அணியாமல் வாழ ஏங்குகிறேன்-நடிகை பூஜா ஹெக்டே
ஜீவா ஜோடியாக முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
தற்போது நெல்சன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை என்று கொரோனா எல்லோரது வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனாவுக்கு முன்பு ஜாலியாக சுற்றிய மாதிரி இப்போது சுற்ற முடியாத நிலைமை உள்ளது.

கொரோனா முன்னால் எல்லோரும் சமம். அதற்கு பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் கிடையாது. எல்லோரையும் தாக்குகிறது. விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டி உள்ளது.

பாதுகாப்புக்கு எல்லா முன் எச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்க வேண்டி உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்கள் வீட்டோடு இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நாங்கள் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டி இருக்கிறது.

ஏதோ ஒரு தெரியாத பயம் எங்களை பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முன்பு மாதிரி எங்களால் சுற்ற முடியவில்லை. படப்பிடிப்பு அரங்கிலும் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. இந்த வேதனை எனக்குள் நிறைய இருக்கிறது. முக கவசம் அணியாமல் வாழும் வாழ்க்கை எப்போது வருமோ என்ற ஏக்கம் உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் முக கவசம் அணியாமல் ரகளை செய்த என்ஜினீயர் போலீசார் ரூ.200 அபராதம்
கேரளாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் முக கவசம் அணியாமல் ரகளை செய்த சாப்ட்வேர் என்ஜினீயரை போலீசில் ஒப்படைத்தனர். அவருக்கு போலீசார் ரூ.200 அபராதம் வசூலித்து எச்சரித்து அனுப்பினர்.