இந்தியில் நடிக்கும் மகிழ்ச்சியில் ராஷ்மிகா


இந்தியில் நடிக்கும் மகிழ்ச்சியில் ராஷ்மிகா
x
தினத்தந்தி 22 April 2021 1:58 AM GMT (Updated: 2021-04-22T07:28:40+05:30)

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்தவர் ராஷ்மிகா மந்தனா.

 தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்திலும் நடித்து இருந்தார். இந்த நிலையில் ராஷ்மிகாவுக்கு மிஷன் மஞ்சு, அமிதாப்பச்சனுடன் குட்பை ஆகிய 2 இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் ராஷ்மிகா கூறும்போது, “அமிதாப்பச்சனுடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவருடன் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது என்று எனது அம்மா அப்பாவிடம் சொன்னபோது நம்பவில்லை. உண்மையா சொல்றியா, விளையாட்டு காட்டுறியா? என்றனர்.

தலையில் அடித்து சத்தியம் செய்த பிறகே நம்பினார்கள். தமிழ், தெலுங்கு திரையுலகில் என்னை எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இப்போது குட்பை, மிஷன் மஞ்சு ஆகிய படங்கள் மூலம் வட இந்தியாவில் கால்பதிக்க போகிறேன்.

குட்பை படத்தில் அமிதாப்பச்சனுடன் நடிக்க பதற்றமுடன் படப்பிடிப்பு அரங்கில் அடியெடுத்து வைத்தேன். ஆனால் அவர் ரொம்ப சாதாரணமாக என்னுடன் பேசினார். உடனே பதற்றம் குறைந்துபோனது.

அமிதாப்பச்சனுடன் நடிக்க போகிறாய், ஒரு ஆசிரியர் முன்பு இருக்கும் மாணவி மாதிரி இருந்து கொள் என்று பெற்றோர் அறிவுரை கூறினார்கள். அது மகிழ்ச்சியாக இருந்தது'' என்றார்.

Next Story