சினிமா செய்திகள்

‘தலைவி' படம் ஓ.டி.டி.யில் ரிலீசா? + "||" + Thalaivi Movie Release on OTT

‘தலைவி' படம் ஓ.டி.டி.யில் ரிலீசா?

‘தலைவி' படம் ஓ.டி.டி.யில் ரிலீசா?
சில மாநிலங்களில் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இதனால் திரையுலகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் சில மாநிலங்களில் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இதனால் திரையுலகம் பாதிக்கப்பட்டு உள்ளது. புதிய படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு வருகின்றன. சில படங்களை தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகளும் நடக்கின்றன.

இந்த நிலையில் கங்கனா ரணாவத் நடித்துள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சி நடப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவின. இதனை பட நிறுவனம் தரப்பில் மறுத்துள்ளனர்.

“தலைவி படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று சிலர் தவறான வதந்தி பரப்புகிறார்கள். அதனை நம்ப வேண்டாம்'' என்று கூறியுள்ளனர். தலைவி படம் இந்த மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக இருந்தது.

கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை விஜய் இயக்கி உள்ளார். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமி நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.