சினிமா செய்திகள்

“ஈவ் டீசிங் செய்து தாக்கியதில் மயங்கிவிட்டேன்”; நடிகைக்கு நேர்ந்த துயர அனுபவம் + "||" + "I fell in love with Eve Teasing"; Tragic experience for the actress

“ஈவ் டீசிங் செய்து தாக்கியதில் மயங்கிவிட்டேன்”; நடிகைக்கு நேர்ந்த துயர அனுபவம்

“ஈவ் டீசிங் செய்து தாக்கியதில் மயங்கிவிட்டேன்”; நடிகைக்கு நேர்ந்த துயர அனுபவம்
கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக்கான சாச்சி 420 படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக்.
வளர்ந்த பிறகு அமீர்கானின் தங்கல் படத்தில் நடித்து பிரபலமானார். மீண்டும் அமீர்கானுடன் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் நடித்தார். அந்த படம் சரியாக போகவில்லை. மேலும் பல இந்தி படங்களில் நடித்து இருக்கிறார்.இந்த நிலையில் பாத்திமா சனா ஷேக்கை மர்ம நபர், ஈவ் டீசிங் செய்து தாக்கிய சம்பவம் பரபரப்பாகி உள்ளது. 

இதுகுறித்து பாத்திமா சனா ஷேக் அளித்துள்ள பேட்டியில், “நான் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்துவிட்டு திரும்பி வந்தபோது ஒருவன் என்னையே உற்றுப் பார்த்தான். ஏன் இப்படி பார்க்கிறாய் என்று கேட்டேன். அவனோ அப்படித்தான் பார்ப்பேன் என்றான். இதனால் எனக்கு கோபம் வந்து உதைப்பேன் என்றேன். அவனோ உதை பார்க்கலாம் என்றான். உடனே அவனை நான் அறைந்தேன். பதிலுக்கு அந்த ஆசாமி என்னை தாக்கினான். இதில் எனக்கு மயக்கம் வந்துவிட்டது. மயக்கம் தெளிந்து எனது தந்தையை தொடர்பு கொண்டு விவரத்தை சொன்னேன். அவர் சில ஆட்களை அழைத்துக் கொண்டு வந்தார். உடனே என்னை தாக்கியவன் அங்கிருந்து ஓடி விட்டான்’’ என்றார்.