விஷாலின் 2 புதிய படங்கள்


விஷாலின் 2 புதிய படங்கள்
x
தினத்தந்தி 3 May 2021 11:07 PM GMT (Updated: 2021-05-04T04:37:32+05:30)

அயோக்யா, ஆக்‌ஷன் படங்களுக்கு பிறகு விஷால் நடித்த சக்ரா படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.

தொடர்ந்து ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆர்யா வில்லனாகவும் மிருனாளினி கதாநாயகியாகவும் வருகிறார்கள். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.துப்பறிவாளன் 2-ம் பாகம் படமும், விஷால் கைவசம் உள்ளது. ஏற்கனவே துப்பறிவாளன் 2-ம் பாகம் படப்பிடிப்பை தொடங்கிய நிலையில் படத்தின் இயக்குனர் மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் 
கருத்து வேறுபாடு ஏற்பட்டு படம் பாதியில் நிற்கிறது.

துப்பறிவாளன் 2-ம் பாகத்தை நானே இயக்குவேன் என்று விஷால் அறிவித்து உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஷால் மேலும் 2 புதிய படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். இதில் ஒரு படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது விஷாலுக்கு 31-வது படம். இந்த படத்தை தொடர்ந்து, அவரது 32-வது படத்தை, அடங்க மறு படத்தை எடுத்து பிரபலமான கார்த்திக் தங்கவேல் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story