சினிமா செய்திகள்

தாமதமாகும் விஜய் படம் + "||" + Delayed Vijay film

தாமதமாகும் விஜய் படம்

தாமதமாகும் விஜய் படம்
விஜய் நடிக்கும் 65-வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது.
விஜய் தேர்தலில் ஓட்டு போட்டதும் உடனடியாக ஜார்ஜியாவுக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார்.அடுத்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பை உடனடியாக சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். வணிக வளாகம் ஒன்றில் முக்கிய காட்சிகளை படமாக்கவும் முடிவு செய்து இருந்தனர். ஆனால் கொரோனா 2-வது அலை காரணமாக வணிக வளாகங்களை அரசு மூடி இருப்பதால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி தொடங்க முடியாமல் தாமதம் ஏற்பட்டு உள்ளது. வணிக வளாகத்தை அரங்காக அமைத்து படப்பிடிப்பை நடத்தலாமா என்று படக்குழுவினர் யோசித்தனர். ஆனால் அரங்கு அமைக்கும் தொழிலாளர்கள் பாதுகாப்பை கருதி அந்த முயற்சியையும் கைவிட்டு விட்டனர். இதனால் படப்பிடிப்பை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். யோகிபாபு, அபர்ணா தாஸ், வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.