| மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலகத்தில் சந்திப்பு | கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 47 போலீசார் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! | சென்னை வடபழனியில் இருந்து நுங்கம்பாக்கம் செல்லும் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் | டெல்லி எய்ம்சில் குழந்தைகளிடம் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கான மருத்துவப் பரிசோதனையை இன்று தொடங்குகிறது ! | அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பயணித்த விமானத்தில் திடீர் தொழில்நுட்பக்கோளாறு - விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம் | தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் இ-பதிவு இ-பதிவு இணையதளம் முடங்கியது! |

சினிமா செய்திகள்

அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த்! + "||" + Rajinikanth returns to Chennai

அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த்!

அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
சென்னை

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு முடிவடந்ததை அடுத்து ஐதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த ரஜினிகாந்த், பின்னர் காரில் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது கொல்க்கத்தாவில் நடைபெற உள்ளதாக படகுழு தெரிவித்துள்ளது. 

 முதல் அலை முடிந்து கட்டுப்பாடுகள் தளர்த்தியதும் அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்கியது. படப்பிடிப்பு குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இரண்டு வாரங்கள் முன்புதான் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கப்பட்டது.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். டி.இமான் இசை. வெற்றி ஒளிப்பதிவு. ரூபன் எடிட்டிங்கை கவனிக்கிறார். நவம்பரில் தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்த படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 5 ஜி தொழில்நுட்ப மனு : நடிகை ஜூகி சாவ்லாவுக்கு டெல்லி ஐகோர்ட்டு ரூ.20 லட்சம் அபராதம்
5ஜி தொழில்நுட்பம் தொடரபாக டெல்லி ஐகோர்ட்டில் நடிகை ஜூகி சாவ்லா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ரூ.20 லட்சம் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.
2. கமல்ஹாசன் படங்களை இயக்கிய டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்
கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, மகாராசன் படங்களை இயக்கிய ஜி.என் ரங்கராஜன் காலமானார்.
3. கே.ஜி.எப் நடிகர் யாஷ் கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிவாரண நிதி
கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக பிரபல நடிகர் யாஷ் வழங்கியுள்ளார்.
4. கணவர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்: நடிகர் கைது
நடிகர் கரண் மெஹ்ராவுக்கும் அவர் மனைவிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது
5. நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் டிரைலர் வெளியீடு; கதை என்ன...?
நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.