சினிமா செய்திகள்

கொரோனா பயம் நீங்க காஜல் அகர்வால் யோசனை + "||" + Kajal Agarwal's idea to get rid of corona fear

கொரோனா பயம் நீங்க காஜல் அகர்வால் யோசனை

கொரோனா பயம் நீங்க காஜல் அகர்வால் யோசனை
காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் அவர் கைவசம் 5 படங்களும், தெலுங்கில் 2 படங்களும் உள்ளன.
காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் அவர் கைவசம் 5 படங்களும், தெலுங்கில் 2 படங்களும் உள்ளன. கொரோனா குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது:-

''நாட்டில் கொரோனா பயங்கரமாக உள்ளது. அதை எதிர்கொள்ள முடியாமல் திகைத்து நிற்கிறோம். இனம்புரியாத பயம் எல்லோரிடமும் இருக்கிறது. வீட்டில் இருப்பவர்களும் பயந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த பயத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் கொரோனா பற்றி யோசிக்காமல் பிடித்த ஏதாவது ஒரு வேலையில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் கொரோனாவை மறக்க முடியும். அதன் மீது இருக்கும் பயமும் போகும். கொரோனாவை பற்றியே சிந்தித்து இனிமேல் அவ்வளவுதான். வாழ்க்கை அழிந்த மாதிரிதான் என்று யோசிக்காமல் நேர்மறையாக சிந்தியுங்கள். நான் இப்போது துணிக்கு எம்பிராய்டரி செய்யும் வேலையை கற்றுக்கொண்டு இருக்கிறேன். எனக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் இந்த வேலையை செய்கிறேன். அப்போது மனது உற்சாகமாக இருக்கிறது. அதே மாதிரி சமையல், ஓவியம் என்று ஏதாவது பிடித்த வேலையை செய்யுங்கள். இதுவும் ஒரு சிகிச்சை மாதிரிதான். மனதை தைரியமாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்கொள்ளுங்கள். சந்தோஷம்தான் மனிதனுக்கு பாதி பலம்.’'

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை காஜல் அகர்வால் கர்ப்பம்..!
நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை அவரது கணவர் கௌதம் கிட்ச்லு, சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.
2. உணவு முறையை மாற்றி உடல் எடையை குறைக்க அனுஷ்கா யோசனை
உணவு முறையை மாற்றி உடல் எடையை குறைக்க அனுஷ்கா யோசனை.
3. காஜல் அகர்வால் மகிழ்ச்சி
காஜல் அகர்வால் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு திருமண நாள் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
4. ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு யோசனை கூறலாம்: நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு
24-ந்தேதி ஒலிபரப்பாகும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு யோசனை கூறுவதற்கு, நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
5. காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா
நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் கோஸ்ட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பை இழந்துள்ளார்.