சினிமா செய்திகள்

நடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார் + "||" + Actor and assistant director Paunraj has passed away

நடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார்

நடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் உயிரிழந்துள்ளார்.
சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா,  என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு இயக்குனர் பொன்ராம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.