சினிமா செய்திகள்

5 முறை தேசிய விருதை வென்ற மோகன்லால் + "||" + 5 time National Award winner Mohanlal

5 முறை தேசிய விருதை வென்ற மோகன்லால்

5 முறை தேசிய விருதை வென்ற மோகன்லால்
மலையாள நடிகர் மோகன்லாலுக்கு கடந்த 21-ந் தேதி பிறந்த நாள். இதையொட்டி அவரை பற்றிய சிறப்பு தகவல்களை மலையாள திரையுலகம் வெளியிட்டது.
அந்த தகவல்கள் வருமாறு:-

மோகன்லால் 1960-ம் ஆண்டு மே 21-ந் தேதி பிறந்தவர். இவர் 5 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவர். நடிப்புக்காக விருதுகள் வாங்கியது போல் சிறந்த பட தயாரிப்பாளருக்கான விருதும் இவருக்கு கிடைத்துள்ளது. திரையுலகுக்கு இவர் ஆற்றிய சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை கடந்த 2001-ம் ஆண்டில் வழங்கி கவுரவித்தது. சங்கராச்சாரியாரின் சமஸ்கிருத பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. சிறந்த நடிகருக்கான விருதுகளை 5 முறை வென்ற ஒரே நடிகர் மோகன்லால்தான்.

தொடர்புடைய செய்திகள்

1. கங்கனா ரனாவத்துக்கு "பத்மஸ்ரீ" விருது: ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார்
கங்கனா ரனாவத் "பத்மஸ்ரீ" விருதை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.