சினிமா செய்திகள்

ரசிகர்கள் மாற்றத்தை கணித்த தமன்னா + "||" + Tamanna predicts change for fans

ரசிகர்கள் மாற்றத்தை கணித்த தமன்னா

ரசிகர்கள் மாற்றத்தை கணித்த தமன்னா
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தற்போது வெப் தொடர்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தற்போது வெப் தொடர்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் தமன்னா நடித்த நவம்பர் ஸ்டோரிஸ் வெப் தொடர் வெளியானது. இந்த நிலையில் தமன்னா அளித்துள்ள பேட்டியில், “தற்போது சினிமாவுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. திரைப்படங்கள் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் மாறி உள்ளது. சினிமா பற்றிய அவர்களின் பார்வையும் இனிமேல் மாறும். இந்த மாற்றங்கள் காரணமாக நட்சத்திர அந்தஸ்தும் மாற தொடங்கி உள்ளது.


தனி நடிகருக்காக ரசிகர் யாரும் படங்களை பார்க்க மாட்டார்கள். படத்தின் கதை வலுவாக உள்ளதா என்பதை வைத்தே படம் பார்க்கிறார்கள். 10 வருடங்களுக்கு முன்னால் ஒரு நடிகருக்கு கிடைத்த ரசிகர்கள் கூட்டம் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு கிடைப்பது கஷ்டமான விஷயம். இந்த நிலையில் எனக்கும் ரசிகர் கூட்டம் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் கிரைம், திரில்லர் கதைகளில் நடிக்காத குறையை நவம்பர் ஸ்டோரிஸ் வெப் தொடர் போக்கியது. அதில் நான் நடித்த கதாபாத்திரம் பெரிய சவாலாக இருந்தது’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. எழுத்தாளரான தமன்னா
தமிழில் பையா, அயன், சுறா, சிறுத்தை, வீரம், தேவி, உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.