சினிமா செய்திகள்

நகைகளை கொள்ளையடிக்க பெண் வேடத்தில், யோகி பாபு + "||" + Yogi Babu in the role of a woman robbing jewelry

நகைகளை கொள்ளையடிக்க பெண் வேடத்தில், யோகி பாபு

நகைகளை கொள்ளையடிக்க பெண் வேடத்தில், யோகி பாபு
யோகி பாபு நடித்து வந்த ‘பேய் மாமா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. இது, ஒரு நகைச்சுவை பேய் படம். சக்தி சிதம்பரம் டைரக்டு செய்து இருக்கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-
‘‘கதைப்படி, யோகி பாபு மந்திரவாதி. பேய்களை விரட்டுவதில் கெட்டிக் காரர். இவர் பேயை விரட்டுவதற்காக ஒரு வீட்டுக்கு போகிறார். அங்கே பேய், யோகி பாபு மீது ஏறிவிடுகிறது. ஒரு மார்வாடி வீட்டில் நகைகளை கொள்ளையடிக்க அவர் பெண் வேடத்தில் செல்கிறார். அவர் திட்டமிட்டபடி கொள்ளையடித்தாரா? அல்லது மாட்டிக்கொண்டாரா? என்பது கதை.

இந்த நிலையில், விஷக் கிருமிகளை உருவாக்கி உயிர்களை பறிக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது. பேயாக இருக்கும் யோகி பாபு அந்த கும்பலின் சதித்திட்டத்தை எப்படி முறியடிக்கிறார்? என்பது கிளைக் கதை.

யோகி பாபுவுடன் வில்லனாக பொன் குமரன், வில்லியாக காவியா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.