சினிமா செய்திகள்

சர்வதேச விருதுகளை அள்ளிய ‘சின்னஞ்சிறு கிளியே’ + "||" + International award-winning ‘Tiny Clyde’

சர்வதேச விருதுகளை அள்ளிய ‘சின்னஞ்சிறு கிளியே’

சர்வதேச விருதுகளை அள்ளிய ‘சின்னஞ்சிறு கிளியே’
‘சின்னஞ்சிறு கிளியே’ என்ற புதிய படம் திரைக்கு வரும் முன்பே சர்வதேச விருதுகளை அள்ளியிருக்கிறது.
‘சின்னஞ்சிறு கிளியே’ என்ற புதிய படம் திரைக்கு வரும் முன்பே சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டது. அதில் சிறந்த அறிமுக டைரக்டர் விருது, இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர் விருது, குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு விருது உள்பட பல்வேறு விருதுகளை ‘சின்னஞ்சிறு கிளியே’ படம் அள்ளியிருக்கிறது.

இதுபற்றி அந்த படத்தின் தயாரிப்பாளர் செந்தில் நாதன், சபரிநாதன் முத்துப்பாண்டியன் ஆகிய இருவரும் கூறும்போது...

‘‘இது ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசத்தை மையமாக கொண்ட படம். உயிருக்கு போராடும் அந்த மகளை தந்தை எப்படி காப்பாற்றுகிறார்? என்பதை திரைக்கதை பேசும். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது’’ என்றார்.

படத்தின் கதாநாயகியாக சான்ட்ரா நடித்திருக்கிறார்.