சினிமா செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க ஐஸ்வர்யா ராஜேஷ் விழிப்புணர்வு வீடியோ + "||" + Prevent corona spread Aishwarya Rajesh Awareness video

கொரோனா பரவலை தடுக்க ஐஸ்வர்யா ராஜேஷ் விழிப்புணர்வு வீடியோ

கொரோனா பரவலை தடுக்க ஐஸ்வர்யா ராஜேஷ் விழிப்புணர்வு வீடியோ
கொரோனா பரவலை தடுக்க நடிகர் நடிகைகள் வீடியோக்களில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது.
“நாம் இப்போது கொரோனா 2-வது அலையில் இருக்கிறோம். இது நம் எல்லோருக்குமே தெரியும். முதல் அலையைவிட இரண்டாவது அலை நிறைய பேரை பாதித்துள்ளது. முக்கியமாக இதய நோய், ஆஸ்துமா உள்ளிட்ட உடல் நல பிரச்சினை உள்ளவர்களை நிறையவே பாதித்து உள்ளது. தயவு செய்து வீட்டில் இருந்து வெளியே வராதீர்கள். அப்படி ஒருவேளை அவசர தேவையாக வெளியே வர வேண்டும் என்றால் இரண்டு முக கவசம் போட்டுக் கொள்ளுங்கள். அதுமட்டுமன்றி கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்துங்கள். முக்கியமாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். கொரோனாவை வெல்வோம். மக்களை காப்போம். நம்மையும் காப்போம். நாட்டையும் காப்போம்.'' இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கொரோனா பரவலை தடுக்க வேலூர் நேதாஜி மார்க்கெட்டை மூட நடவடிக்கை - சில்லரை கடைகள் வேறு இடத்துக்கு மாற்றம்
கொரோனா பரவலை தடுக்க நேதாஜி மார்க்கெட் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
3. கொரோனா பரவலை தடுக்க இத்தாலியில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்க இத்தாலியில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.