கொரோனா பாதிப்புகள் கவலை அளிக்கிறது நடிகை நிதி அகர்வால்


கொரோனா பாதிப்புகள் கவலை அளிக்கிறது நடிகை நிதி அகர்வால்
x
தினத்தந்தி 31 May 2021 9:46 PM GMT (Updated: 2021-06-01T03:16:56+05:30)

ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிதி அகர்வால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனம் தொடங்கி இருக்கிறார்.

தமிழில் சிம்பு ஜோடியாக ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் பூமி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிதி அகர்வால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனம் தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் தனி குழுவை உருவாக்கி தேவைப்படுவோருக்கு உதவிகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

இது குறித்து நிதி அகர்வால் கூறும்போது, “இந்த கொரோனா தொற்றில் நெருங்கியவர்களை இழந்து வருகிறோம். பலியாவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது கவலை அளிக்கிறது. தினமும் நெருங்கிய யாரோ ஒருவரை இழக்கிறோம். கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு உதவ நான் தொண்டு நிறுவனம் தொடங்கி இருக்கிறேன். இந்த அமைப்பின் இணையதளத்தில் பொதுமக்கள் வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் போன்று என்ன வேண்டுமானாலும் பதிவிட்டு எங்களுக்கு தெரிவிக்கலாம். அவர்களுக்கு முடிந்த அளவுக்கு உதவிகள் செய்யப்படும். கொரோனா பாதிப்பு உதவிகளுக்காகவே இந்த அமைப்பு தொடங்கப்படுகிறது'' என்றார்.

Next Story