சினிமா செய்திகள்

பிரபல டைரக்டர் ஜி.என். ரங்கராஜன் மாரடைப்பால் மரணம் + "||" + Famous director G.N. Rangarajan dies of heart attack

பிரபல டைரக்டர் ஜி.என். ரங்கராஜன் மாரடைப்பால் மரணம்

பிரபல டைரக்டர் ஜி.என். ரங்கராஜன் மாரடைப்பால் மரணம்
பிரபல பழம்பெரும் டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன். இவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சென்னையில் நேற்று காலை மாரடைப்பால் ஜி.என்.ரங்கராஜன் மரணம் அடைந்தார்.
பிரபல பழம்பெரும் டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன். இவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சென்னையில் நேற்று காலை மாரடைப்பால் ஜி.என்.ரங்கராஜன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91.


டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடம் பல படங்களில் உதவி இயக்குனராக ஜி.என்.ரங்கராஜன் பணியாற்றி பின்னர் டைரக்டரானார். கமல்ஹாசன் நடித்த கல்யாண ராமன், மீண்டும் கோகிலா, மகராஜன், கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். முத்து எங்கள் சொத்து, மனக்கணக்கு, பல்லவி மீண்டும் பல்லவி, அடுத்தாத்து ஆல்பர்ட் உள்பட 13 படங்களை இயக்கி உள்ளார்.

மரணம் அடைந்த ஜி.என்.ரங்கராஜனுக்கு சக்குபாய் என்ற மனைவியும் ஜி.என்.ஆர். குமாரவேலன் என்ற மகனும், பரமேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். ஜி.என்.ஆர். குமாரவேலனும் இயக்குனராக உள்ளார். இவர் நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா ஆகிய படங்களை டைரக்டு செய்துள்ளார். தற்போது அருண் விஜய் நடிக்கும் சினம் படத்தை இயக்கி வருகிறார். ஜி.என்.ரங்கராஜன் மறைவுக்கு கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல கன்னட நடிகர் மரணம்
பிரபல கன்னட நடிகர் ஷங்கர் ராவ். இவர் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஷங்கர் ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
2. பிரபல நடிகை திடீர் மரணம்
மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரிலும், திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான உமா மகேஸ்வரி குடும்பத்துடன் சென்னை காட்டுப்பாக்கத்தில் வசித்து வந்தார்.
3. பிரபல பட அதிபர் மரணம்
மலையாள நடிகர் நெடுமுடி வேணு மரணம் அடைந்த நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மகேஷ் கொனேருவும் நேற்று காலை மாரடைப்பால் உயிர் இழந்தார்.
4. பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை ஏ.க்யூ.கான் மறைவு
பகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் அப்துல் காதிர் கான் இன்று மரணம் அடைந்தார்.
5. பிரபல நடிகை மரணம்
பிரபல மலையாள நடிகை ஸ்ரீலட்சுமி. இவர் பல திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து இருக்கிறார்.