கார்த்தி படத்தை கொண்டாடியது போல் ‘‘சூர்யா படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்’’


கார்த்தி படத்தை கொண்டாடியது போல் ‘‘சூர்யா படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்’’
x
தினத்தந்தி 4 Jun 2021 4:22 PM GMT (Updated: 2021-06-04T21:52:07+05:30)

சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி தயாரிக்கிறது. இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடிப்பதாக பேசப்படுகிறது.

சூர்யா இப்போது தனது 39-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பெயர் சூட்டப்படாத இந்த படத்தை த.செ.ஞனவேல் டைரக்டு செய்கிறார். சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி தயாரிக்கிறது. இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடிப்பதாக பேசப்படுகிறது.

இதையடுத்து சூர்யா நடிக்கும் 40-வது படத்தை பாண்டிராஜ் டைரக்டு செய் கிறார். சூர்யாவுடன் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், இளவரசு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

‘‘இது ஒரு கனமான குடும்ப கதை. கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை ரசிகர்கள் எப்படி கொண்டாடினார்களோ, அப்படி சூர்யா நடிக்கும் படத்தையும் கொண்டாடுவார்கள்’’ என்று டைரக்டர் பாண்டிராஜ் கூறினார்.

Next Story