சினிமா செய்திகள்

சீதை வேடத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்ட நடிகை + "||" + To play the role of Seethai Asked for a salary of Rs 12 crore Actress

சீதை வேடத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்ட நடிகை

சீதை வேடத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்ட நடிகை
தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற பெயரில் வெளியான ராமாயண படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர்.
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற பெயரில் வெளியான ராமாயண படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் ஆதிபுருஷ் என்ற பெயரில் ராமாயண கதை படமாகிறது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 3 டி தொழில்நுட்பத்தோடு இன்னொரு ராமாயண படமும் தயாராகிறது.

தங்கல் படம் மூலம் பிரபலமான நிதிஷ் திவாரி, மாம் படத்தை இயக்கிய ரவி உடையார் ஆகியோர் இணைந்து இயக்குகிறார்கள். இந்த படத்தில் சீதையாக நடிக்க பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை அணுகினர். அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய படங்களுக்கு ரூ.8 கோடி வாங்கிய அவர் ரூ.12 கோடி கேட்டது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 10 மாதங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டி இருப்பதால் இந்த தொகையை அவர் கேட்டதாக கூறப்படுகிறது. கரீனா கேட்ட சமபளத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்வதா அல்லது வேறு நடிகையை பார்ப்பதா என்று படக்குழுவினர் யோசிக்கின்றனர்.