சினிமா செய்திகள்

கொரோனா நிவாரணம் ரசிகர்கள் வங்கி கணக்கில் பணம் போட்ட சூர்யா + "||" + Corona relief Fans bank account Surya put the money

கொரோனா நிவாரணம் ரசிகர்கள் வங்கி கணக்கில் பணம் போட்ட சூர்யா

கொரோனா நிவாரணம் ரசிகர்கள் வங்கி கணக்கில் பணம் போட்ட சூர்யா
கொரோனா 2-வது அலை ஊரடங்கினால் மக்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.
அரசு நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிதி உதவிகள் வழங்கி வருகிறது. திரைப்படத்துறை முடங்கி உள்ளதால் பெப்சி நிதி திரட்டி சினிமா தொழிலாளர்களுக்கு வழங்குகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா கொரோனாவால் வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு நிதி உதவி அளித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் ரசிகர் மன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் நிர்வாகிகள் 200 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கி உள்ளார்.

இந்த தொகையை ரசிகர்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக செலுத்தி உள்ளார். கொரோனா கால கஷ்டத்தில் சூர்யா அனுப்பி உள்ள தொகை பெரிய உதவியாக இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 40-வது படம். நாயகியாக பிரியங்கா அருள் மோகன் மற்றும் சத்யராஜ், சரண்யா, இளவரசு ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு 35 சதவீதம் முடிந்துள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நிவாரணம்: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு
கொரோனாவால் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்கள் ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையை பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2. 78 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 78 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணத்தை கலெக்டர் வழங்கினார்.