சினிமா செய்திகள்

குழந்தைகளுக்கான படம்: விருதுகளை அள்ளிய ‘தகவி’ + "||" + Picture for kids: Award-winning ‘Adapter’

குழந்தைகளுக்கான படம்: விருதுகளை அள்ளிய ‘தகவி’

குழந்தைகளுக்கான படம்: விருதுகளை அள்ளிய ‘தகவி’
‘ஆறடி’ என்ற பெயரில் பெண் வெட்டியானின் கதையை படமாக்கி பாராட்டுகளை பெற்ற படக்குழுவினர் அடுத்து, ‘தகவி’ என்ற பெயரில் குழந்தைகளுக்கான தரமான படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதில் பவாஸ், குகன், சாய், சஞ்சய், ஆதிசக்தி ஆகிய குழந்தை நட்சத்திரங்களுடன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நகைச்சுவை வேடத்தில் நடித்து இருக்கிறார். ராகவ், ஜெய்போஸ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, சிங்கம்புலி, அஜய் ரத்தினம், வையாபுரி, பயில்வான் ரங்கநாதன், வெங்கல்ராவ், சாப்ளின் பாலு, கிங்காங், ஐந்து கோவிலான் ஆகியோர் நடித்துள்ளனர்.

கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் இசையமைத்து இருக் கிறார்; எம்.சக்திவேல் கதை-வசனம் எழுத, சந்தோஷ்குமார் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். எஸ்.நவீன்குமார் தயாரித்து இருக்கிறார்.

இந்த படம் பல சர்வதேச பட விழாக்களில் விருதுகளை அள்ளி இருக்கிறது. நவடா சர்வதேச படவிழா, பாரத் சர்வதேச படவிழா, மராட்டிய சர்வதேச படவிழா, மாஸ்கோ படவிழா ஆகிய படவிழாக்களில் விருதுகளை பெற்றதுடன், மேலும் பல படவிழாக்களிலும் திரையிடுவதற்காக ‘தகவி’ படம் அனுப்பப்பட்டுள்ளது.

குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அதுவும் அவர்களை நல்வழிப்படுத்துவது சவாலானது என்ற கருத்தை சித்தரிக்கும் படம், இது.