வில்லனாக நடிக்கிறேனா? நடிகர் மாதவன் விளக்கம்


வில்லனாக நடிக்கிறேனா? நடிகர் மாதவன் விளக்கம்
x
தினத்தந்தி 13 Jun 2021 10:46 PM GMT (Updated: 2021-06-14T04:16:28+05:30)

கதாநாயகர்கள் வில்லன்களாக நடிக்கிறார்கள். விக்ரம் வேதா, மாஸ்டர் படங்களில் விஜய்சேதுபதி வில்லனாக வந்தார்.

கார்த்திக், அர்ஜூன் ஆகியோரும் வில்லன்களாக நடித்துள்ளனர். ஆர்யா எனிமி படத்தில் வில்லனாக நடிக்கிறார். இயக்குனர் அட்லி இயக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஜெய்யிடம் பேசி வருகின்றனர். இந்த நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தனேனி கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படத்தில் வில்லன் வேடம் ஏற்க மாதவனிடம் பேசி வருவதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவியது. 

இதற்கு விளக்கம் அளித்து மாதவன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கவும், மீண்டும் அந்த மாயத்தை உருவாக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். லிங்குசாமி இனிமையானவர். அவர் இயக்கும் தெலுங்கு படத்தில் நான் வில்லனாக நடிப்பதாக வந்துள்ள தகவல் உண்மையானது அல்ல'' என்று கூறியுள்ளார். மாதவன் ஏற்கனவே லிங்குசாமி இயக்கிய ரன், வேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Next Story