மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு


மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு
x
தினத்தந்தி 13 Jun 2021 11:37 PM GMT (Updated: 2021-06-14T05:07:45+05:30)

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் விடுபட்ட சில காட்சிகளை படமாக்க படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள்.

வட மாநிலங்களில் இந்த காட்சிகளை எடுக்க உள்ளனர். படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என்றும் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்ததால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. நடிகை குஷ்பு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருந்ததால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் பாக்கி உள்ளது என்றும், அவரும் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டன. ஏற்கனவே ஊரடங்கு மற்றும் ஐதராபாத்தில் அண்ணாத்த படக்குழுவினருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது. சில மாதங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்று தான் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து கொடுத்தார். நயன்தாரா காட்சிகளும் முடிந்து விட்டன. 

இதர நடிகர், நடிகைகள் சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிவா இயக்குகிறார்.

Next Story