கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் யோகி பாபு


கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் யோகி பாபு
x
தினத்தந்தி 14 Jun 2021 3:29 PM GMT (Updated: 2021-06-14T20:59:06+05:30)

நடிகர் யோகி பாபு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

சென்னை,

நாடுமுழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பூசியை அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு துறை பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகரான நடிகர் யோகி பாபு இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அதையடுத்து கொரோனா தடுப்பூசி எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும், பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story