சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் விஷால் + "||" + Vishal in shooting

படப்பிடிப்பில் விஷால்

படப்பிடிப்பில் விஷால்
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கினால் சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரான 50-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
 தற்போது தெலுங்கானாவில் ஊரடங்கை தளர்த்தி படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுத்துள்ளதால் விஷால் நடிக்கும் அவரது 31-வது படத்தின் படப்பிடிப்பு அங்கு தொடங்கி உள்ளது.

படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள பலரும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தினமும் படப்பிடிப்பு அரங்கு கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படுகிறது. உடல் வெப்ப பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.

படப்பிடிப்பு நீண்ட நாட்கள் தொடர்ந்து நடக்கும் என்றும், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து படப்பிடிப்பு நடத்தப்படுவதாகவும், மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் விஷால் தெரிவித்து உள்ளார்.

மேலும் விஷால் கூறும்போது, “படக்குழுவில் 55 பேர் உள்ளனர். அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம். தொற்று இல்லை என்று வந்தது. படப்பிடிப்பை முடித்துவிட்டு ஆகஸ்டு மாதம் சென்னை திரும்புவோம்'' என்றார்.