சாந்தனுவுக்கு ஆர்யா நடன பயிற்சி அளிப்பாரா?


சாந்தனுவுக்கு ஆர்யா நடன பயிற்சி அளிப்பாரா?
x
தினத்தந்தி 20 Jun 2021 5:41 AM GMT (Updated: 2021-06-20T11:11:25+05:30)

பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியின் வாரிசு சாந்தனு, திறமையாக நடனம் ஆடுபவர்.

இவருடைய திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தின் இரண்டாவது வீடியோ பதிவு வெளியாகி இருக்கிறது. அதில் சாந்தனுவின் நடனம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருப்பதாக பாராட்டுகள் வந்து குவிவதாக கூறப்படுகிறது. 

நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் குறும்பாக ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். பாடல்கள் சிறப்பாக இருந்ததாகவும், தனது நடன அசைவுகளை மறக்காமல் சாந்தனு ஆடியதாகவும் தமாசாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக ஆர்யாவுக்கு சாந்தனு நன்றி தெரிவித்து இருக்கிறார். அதோடு ஆர்யாவின் இருப்பிடத்துக்கு வந்து பிசிறு இல்லாமல் நடனம் ஆடுவது எப்படி? என்று கற்றுக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

Next Story