சினிமா செய்திகள்

நடிகர் அமரசிகாமணி மாரடைப்பால் மரணம் + "||" + Actor Amarasikamani dies of heart attack

நடிகர் அமரசிகாமணி மாரடைப்பால் மரணம்

நடிகர் அமரசிகாமணி மாரடைப்பால் மரணம்
நடிகர் அமரசிகாமணி மாரடைப்பால் மரணம்.
பிரபல குணச்சித்திர நடிகர் அமரசிகாமணி. இவர் குடும்பத்துடன் மடிப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அமரசிகாமணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அமரசிகாமணி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.


மரணம் அடைந்த அமரசிகாமணிக்கு ஷியாமளா தேவி என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். எஸ்.வி.சகஸ்ரநாமம், கோமல் சாமிநாதன் போன்றோரின் நாடக குழுவில் இருந்து அமரசிகாமணி சினிமாவுக்கு வந்தார்.

ரஜினிகாந்தின் சிவாஜி, விஜயகாந்தின் ரமணா மற்றும் சதுரங்கம், எவனோ ஒருவன் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். சொந்தம், உறவுகள், பொன்னூஞ்சல், அகல்யா உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் ஆயுதப்படை போலீசார் பணியின் போது மாரடைப்பால் மரணம்...!
வேலூர் ஆயுதப்படை போலீசார் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்து உள்ளார்.
2. கொரோனா நோயாளி மரணம்: நீரா ராடியா உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு
கொரோனா நோயாளியின் மரணம் பற்றிய புகார் எதிரொலியாக, நீரா ராடியா உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. ஸ்ரீபெரும்புதூர் அருகே ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த இளம்பெண் - கொலையா? போலீஸ் விசாரணை
ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. குடிபோதையில் அப்பா மகன் சண்டை: சமாதானம் செய்ய சென்ற சித்தப்பா பலி
திருவாரூர் அருகே குடிபோதையில் சண்டை போட்ட அப்பா மகனை சமாதானம் செய்ய சென்ற சித்தப்பாவை உதைத்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
5. கோட்டயம்: அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து 10ம் வகுப்பு மாணவி மர்ம சாவு..!
கோட்டயம் அருகே 15 வயது மாணவி அடுக்கு மாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து விழுந்து இறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.